Posts

பயண நினைவுகள்

முதுமலை நினைவுகள் குடும்பத்தினரோடு ஒரு பயணம் என்பதை நடப்பிலாக்குவது சற்று கடினம்தான் ! பல நாட்களாகத் திட்டமிட்டு வந்த பயணம்.  பல முறைகள் என் உடல் நிலையைக் காரணம்காட்டி நான் மறுத்துக்  கொண்டிருந்தேன்.  இறுதியில் மக்கள் எப்படியோ என்னை சம்மதிக்க வைத்துக் கூட்டிச் சென்றனர். திரும்பி வந்ததும்தான் உணர்ந்தேன் ; பயணம் என்பது - அதுவும் இதுபோன்ற இயற்கைச் சூழல்களின் இனிமை நிறைந்த இடங்களுக்குச் செல்வது என்பது எத்தனை  புத்துணர்ச்சி அளிக்க வல்லது என்பதை !  அப்படிச் சென்ற ஒரு இடம்தான் முதுமலைக் காடுகள் ! சனிக்கிழமை ஜூன் 05 2019 அன்று  காலை 8  மணிக்குப் புறப்படும் ரயிலில் மைசூர் சென்றடைந்தோம். முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனியார் வண்டி ஒன்று ரயில் நிலையத்தின் வெளியே எங்களை ஏற்றிச் செல்லத் தயாராக இருந்தது. அங்கிருந்து மசினகுடி பயண விடுதி ஒரு 3  மணி நேரப் பயணம்.. வழியில் பந்திப்பூர் காட்டுப்பகுதியைத் தாண்டும் போது முதன் முதலில் என் கண்ணில் பட்டது புள்ளிமான்களின் கூட்டம் .  ஒவ்வொன்றும் என்ன ஒரு அழகு ! இப்போதுதான் புரிந்தது ராமாயணத்து சீதை ராமனிடம் மானைப் பிடித்துத் தரச் சொன்னதன் காரணம் ! கண்ணைக

Mudhumalai Memories

Image
முதுமலை நினைவுகள் - 1 இடம் விட்டு நகர்ந்து வந்த பின்னும் இதயம் விட்டு நகரவில்லை  இன்னும் முதுமலைக் குளிர்காற்றும் ஈரம் உலராப் பசுமை களும் ! கி.பாலாஜி 13.06.2019 11.05  இரவு The last photograph taken before leaving Masinagudi resort முதுமலை  நினைவுகள் - 2 'நின் றால் நாட்டிய நடையழகு' சட்டென மனம் சிவந்து போனது. ஏதோவொரு இனம் புரியாத வருத்தம் உள்ளெங்கும் நிறைந்து போனது.  மிகப்பெரிய உருவமும் அளவிடற்கரிய வலிமையும் உள்ள அந்த மிருகங்கள் ஏதோவொரு உள்ளார்ந்த கட்டுப்பாட்டின் காரணமாக மனிதனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் காட்சி மனதில் என்னென்னவோ சிந்தனைகளைத் தூண்டிவிட்டது.  மசினகுடி பயணத்தின் ஒரு பகுதியாக இன்று மாலை  முதுமலை காட்டுப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம். ஓரிடத்தில் யானைகள் காப்பகம் ஒன்றைக் காணநேர்ந்தது. அந்தப் பெரிய நிலப்பரப்பில் மொத்தம் 13 யானைகள் கட்டியிடப் பட்டிருந்தன. நாங்கள் சென்ற நேரம் அவற்றுக்கு உணவளிக்கும் நேரம்.  காட்டில் உலாவும் அந்த யானைகளை வனவிலங்கு இலாகாவின் பாதுகாப்பில், பலவிதமான பயிற்சிகளையும் அளித்து உபயோகப்படுத